This is my first poem, that published in the book, in the year of 2005.
I dedicate this to my grandma..........
என் பாட்டிக்கு என்ன சோகம்?
குச்சு வீட்டில் மச்சுக் கட்டிலில் - அந்தப்
பாட்டிக்கு என்ன யோசனையோ?
கடந்த காலங்களை மீட்டுகிறாளோ?
கடவுளே கதியென்று சிந்தை தளர்ந்தாளோ?
வெளிறிய அவள் விழிகள் சொல்லும் சேதி என்ன?
வெட்டி வாழ்க்கை வாழ்வது வீண் என்றா?
வெற்றிடமாகிப் போன அவள் வீட்டைப் பற்றியதா?
வெள்ளிக்கிழமை கோயிற்பூசை பற்றியதா?
ஐந்து பிள்ளை பெற்று ஆளாக்கி விட்டிருந்தாள்
ஆளுக்காள் ஜாடை காட்டி பெற்ற தாயை விட்டு
ஊருக்கோர் பிள்ளையாய் ஓடோடிவிட்டனர்
பாட்டியோ இன்று குச்சு வீட்டில்...
தாத்தாவும் என்றோ பறந்தோடி விட்டார்
தனிமரமானாள் பாட்டி, தனிமையாய் துணையாய் இன்று
திறந்தகூரைதெரிந்த வானம் -வெண்
பஞ்சு முடி அவள் முதுமையின் விலாசம் காட்டும்!
ஓயாமல் சிந்திக்கும் என்னருமைப் பாட்டியே!
உன் சோகம் சொல் எனக்கு!
பிரிந்த உன் செல்வங்கள் பற்றியதா?
பரிந்து நீ கூறு பாட்டி! கேட்கிறது மச்சுக்கட்டில்.....!

:)
ReplyDelete:)
ReplyDelete